சென்னை மயிலாப்பூரிலுள்ள பாரதீய வித்யாபவனில் ஜீலை 26, திங்கள் 2004 அன்று இப்புத்தகங்கள் வெளியிடப் பெற்றன. பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் 'நிழல்வெளி மாந்தர்' புத்தகத்தை வெளியிட திரு.மாலன் பெற்றுக் கொண்டார். கவிஞர் திரு.வைதீஸ்வரன் 'விலை போகும் நினைவுகள்' என்ற புத்தகத்தை வெளியிட 'கடலோடி' திரு.நரசய்யா அவர்கள் பெற்றுக் கொண்டார்.
திரு.நா.ஸ்ரீதரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, திரு.ஆண்டோ பீட்டர் (Softview Visual Communication) வரவேற்க, திசைகள் திரு.மாலன் அவர்கள் வாழ்த்துரை வழங்க, பேரா.இந்திரா பார்த்தசாரதி, சிஃபி திரு.வெங்கடேஷ் இருவரும் நிழல்வெளி மாந்தர் புத்தகம் பற்றி ஆய்வுரை வழங்க; கவிஞர் திரு.வைதீஸ்வரன், கடலோடி திரு.நரசய்யா இருவரும் 'விலை போகும் நினைவுகள்' எனும் புத்தகத்திற்கு ஆய்வுரை வழங்க புத்தக வெளியீடு நடந்தது. இந்நிகழ்ச்சியில் 'திருப்புவனம் சகோதரிகள்' நா.செல்லம்மாள், நா.சௌந்திரம் அவர்களின் மூன்று இனிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல்களும் இடம் பெற்றன. இந்நிகழ்ச்சியின் புகைப்படங்களும், ஒலிக்கோப்பும் இத்தளத்தில் உள்ளன..